08 August 2015


இன்பத்தமிழ் வானொலி,

அன்புடையீர்,

கடந்த 66 வருடங்களாக சமஷ்டி, தமிழ் தேசியம், ஒரு நாடு இரு தேசம், bla.. bla… என்ற மண்ணாங்கட்டி, கருத்தாங்களை கூறி, மக்களை ஏமாற்றி, இன்று, தங்களுடைய மனைவி பிள்ளைகளை வெளி நாடுகளில் வசிப்பதற்கு அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை இலங்கையின் பொருளாதாரத்தில் உறுஞ்சி எடுத்து, தமிழ் மக்களின் அரசியலை நடத்துகின்றார்கள். ஒரு உதாரணம்: அயிங்கரநேசன், பிரேமச்சந்திரன் இவர்கள் குடும்பம், ஸ்ரீகாந்த, குடும்பம் ஏங்கே?    

சுமந்திரன் ஒரு நேர்மையோடு வாழும் மனிதன். அவரை அரசியலுக்கு பலிக்கடாவாக இழுத்தார்கள். சுமந்திரன் தன்னுடைய கொள்கைகளைத்தான் கூறுவார். மற்ற அரசியல்வாதிகளைபோல பொய் பேசி வாக்குப்பிச்சை கேட்கும் அரசியல்வாதி அல்ல. நேர்மையானவர். உள்ளதை, உறுதியாக கூறுவார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கள்ளம், கபடம் உள்ளவரா? இவரின் கோடி ரூபாய் முதலீடுகள் கொழும்பில் உள்ளது. ஒரு நாடு, இரு தேசம் கேட்கும் இவர், அந்த சொத்துக்களை விற்று, யாழை அபிவிருத்தி செய்ய முன் வருவாரா? கொழும்பில் முதலீடு செய்தவர்கள் யாழை அபிவிருத்தி செய்ய முன் வருவார்களா? ஏன் புலம் பெயர்ந்தவர்கள் இன்றும், கொழும்பில் கட்டடங்களை கட்டுகின்றார்கள். வாங்குகின்றார்கள். யாழுக்கு என்னே கதி?

இன்று, கல்லுண்டாய் ஒரு குப்பை கொட்டும் பிரதேசமாகிவிட்டது. யாழ் நூலகத்தில் இருந்து மூன்று மையில் தூரம்தான். இதைப்பற்றி எந்த ஒரு தமிழனும் விவாதித்தானா? தங்களுடைய பெயர் ஊடகங்களில் வரவேண்டும், வானொலியில் வரவேண்டும் என்று தமிழீழம் பேசுவார்கள். சுன்னாகம் தண்ணீர் பிரச்சனைகளைப்பற்றி பேசுகின்றார்களா? எல்லாம் நடிப்பு.

என்னுடைய முகத்திற்கு நேர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சாதி மேன்மை இல்லாதவன், இவன் எப்படி எங்கள் தலைவனாக முடியும் என்ற நாதாரிகள், இன்றோ, பிரபாகரன் முருகனுக்கு நிகரானவன், தேசியத்தலைவன் என்றெல்லாம் கத்துகின்றார்களே? இவர்கள் எல்லோரும் வேடதாரிகளா? நடிகர்கள்.

மொத்தத்தில் தமிழ் மக்கள் அதிகமானோர் மந்தைக்கூட்டம்.

தமிழ் அரசியல்வாதிகள் ஒரு கொள்ளைக்கூட்டம்.

தமிழ் மக்களில் அதிகமானோர் வேடதாரிகள்.

யான் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய மடல் இத்துடன் அனுப்பி உள்ளேன்.

இப்படிக்கு

அன்புடன்,

கந்தர் பாலநாதன்

8th August 2015