14 August 2015


ஜனநாயக போராளிகள் கட்சி
Crusaders For Democracy (CFD)
கந்தர் பாலநாதன்

இன்று மக்களுக்காக உயிரை தியாகம் செய்து மரணித்தவர்களில் மிகுதி இருப்பவர்கள் அரசாங்கம் புனர்வாழ்வழித்து, விவசாயம் செய்து அவர்கள் வாழ்க்கை ஓடியது. ஆனால் அரசியலில் புகுந்தவர்களோ ஊர் தெரியாத புற்றுக்களில் இருந்து ஊர்ந்து வந்து ராஜ போகம் அனுபவித்துக்கொண்டிருக்கின்ரர்கள். மக்களுக்காக ஏதாவது செய்தார்களா? இல்லையே? இவர்களுக்கு அம்பன், குடத்தனை, கம்பர்மலை, இப்படி இடங்கள் எங்கே இருப்பதென்று தெரியுமா?

வட மாகாண சபை முதல்வர் அண்மையில் வெளியிட்ட ஏழு கருத்துக்கள், இளைய சமுதாயத்தாலும், தமிழ் மக்களாலும் மிகவும் ஏற்கத்தக்க கருத்துக்களாகும். தமிழரசுக்கட்சி என்று ஒரு கட்சியை உருவாக்கி, 66 வருடங்களாக (1949-2015) மக்களுக்கு ஏமாற்று வித்தை காட்டி, அதில் குளிர் காய்ந்த, குளிர் காயும் கிழட்டுக் கூட்டம் இனி மேலாவது ஒதிங்கிப் போய், இளைய சமுதாயத்திற்கு வழி விடவேண்டுமல்லவா? வயதுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், இவர்கள் எல்லோரும் ஒரே குதிரையில் சவாரி செய்வோர் அல்லவா?

இது வரையில் த.தே.கூ. அங்கத்தவர்களையும், மற்ற எல்லோரையும் ஆராய்ந்து ஆறு பிறவித்திறமைகளை மதிப்பீடு செய்யுமிடத்து  மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இவைதான் ஆறு  பிறவித்திறமைகள்:



மனத்தால் உணர்தல்       -             perception
அறிவுக் கூர்மை               -               intelligence
அறிவு                                   -                knowledge
நம்பிக்கை                          -               belief
ஆற்றல், தகுதி உடைய -               competence
யதார்த்தம்                           -              reality



67 வருடங்களாக இவர்கள் அரசியலில் இருந்து, அரசியல் வாதிகளின் வசதிகளை அனுபவித்து, நடக்க முடியாத நிலையில்தான் அரசியலில் இருந்தது விலகுவார்கள் போல. தமிழக கருணாநிதி நிலை. இவர்கள் கிழித்தது ஒன்றுமில்லை. தாங்கள் எல்லோரும் ஒன்றை ஆமோதிக்க வேண்டும். மக்களுக்காக போராடி, உயிரை விட்டவர்கள் யாரோ? ஆனால் இன்று பழங்களை உண்பவர்கள் பற்றைக்குள் இருந்த பாம்புக் புற்றினுள் இருந்து வந்தவர்கள்.
ஜனநாயக போராளிகள் கட்சியில் இருப்பவர்கள், அன்று, ஐந்து கோட்பாட்டினுள் வாழ்ந்தவர்கள். அவை:   
                                      
நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.

அவர்கள் இன்றும் அக்கோட்பாட்டினுல்தான் வாழ்வார்கள் என்ற வலுவான அபிப்பிராயம்.

இவர்கள் ஏன் அரசியலுக்குள் வரவேண்டும்.

1.             மக்களுக்காகத்தான் தங்களுடைய அன்றைய வாழ்வையே இழந்தார்கள்.
2.             புனர் வாழ்வழித்த பின் விவசாயம் செய்து வாழ்க்கையை ஓட்டினார்கள்.
3.             அக்கால கட்டத்தில் மக்களுடைய அவதி நிலையை உணர்ந்தார்கள்.
4.             தங்களால் ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்தார்கள்.
5.             அதை எப்படி, எந்த வழியில் செய்ய முடியும் என்று உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
6.             அரசியலுக்கு ஜனநாயக ரீதியில் வந்தால்தான் மக்களுக்காக சேவை செய்ய முடியும் என்று உணர்ந்தார்கள்.
7.             இன்று எமது பிள்ளைகள் அரசியலுக்குள் ஒரு தலைவனோடு பிரவேசிக்கின்றார்கள். (நேர்மையே வாழ்வழிக்கும் என்று உணரும் வித்தியாதரன்).
8.             பிள்ளைகள் வந்துவிட்டார்கள். மக்களே இனி முடிவு உங்கள் கையில்.
9.             JVP, மண்டையன் குழு, சித்தார்த்தன் குழு இப்படி பல குழு வந்து என்ன கிழித்தார்கள்.
10.           ஆனால் உங்கள் பிள்ளைகள் மக்களுக்காகத்தான் அரசியல் செய்வார்கள், தங்கள் சுகபோகத்திற்காக அல்ல.
11.           மக்களே, நீங்கள் ஒட்டு மொத்த புனர் வாழ்வழித்த போராளிகளையும் இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.
12.           ரணிலுக்கு வால் பிடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தூக்கி எறியுங்கள்.

வாழ்க புனர் வாழ்வழித்த போராளிகள் கட்சி.
LONG LIVE, AND VICTORY TO CFD