பிராமணாள் குல புனிதமும் மனித வாழ்க்கையும்
சாண்டில்யன் (கந்தர் பாலநாதன்)
இக்கட்டுரை,
இப்புவிமாதாமேல் வாழ்ந்த எனது எழுபத்தி நான்கு வருட வாழ்க்கையின் அனுபவங்களும்,
நான் செய்த ஆய்வின் விடைகளையும் ஒரு கட்டுரையாக எழுதுகின்றேன்.
எம்மில்
அதிகமானோர், ten commandments திரையை பார்த்திருப்போம். இரட்ஷகரான் மோசேஸ்
யூதருக்கு விடுதலை அளித்தபோது, யூதர் குழு இரண்டாக பிரிந்ததாம். ஒன்று, மது,
மாதுவுக்கு, விலை போன குழு, இரண்டாவது, பொன்னுக்கும், பொருளுக்கும் பெண்ணுக்கும்
அடிமைப்படாத குழு.
அதேபோல சிந்து
வெளிக்குள் புகுந்த ஆரியர்களில், ஒரு சாரார் பொன்னுக்கும், பொருளுக்கும்
பெண்ணுக்கும் அடிமைப்படாத குழு. இவர்கள் ஆன்மிகம், தர்மம், நீதி, நெறி, ஒழுங்கு, ஆண்டவன் வழிபாட்டில் ஆழமான செறிவு
கொண்டவர்களாக இருந்தார்களாம் என்பது வரலாறு.
இசையிலும் மோகம் கொண்டவர்கள் என்பதும்
வரலாறு. இவர்கள்தான் இன்றைய பிராமணாள்கள்.
பல்லவ அரசாட்சியில், பல்லவ மன்னர்கள்
பிராமணாள் குலத்தை முதல் குலம் என நிறுவியதில் பிராமணாள் குலம் முதல் குலமாக மக்களிடையே மதிப்புப் பெற்றது. பிராமணாள்
ஆன்மீகம், ஆண்டவன் வழிபாடு, நன்னடத்தை, ஒருவனுக்கு ஒரு மனைவி என்று வாழ்ந்தார்கள். மக்களுக்கு ஆன்மீகத்தை
போதித்தார்கள். ஆலயத்தோடு ஒட்டிய அக்கிரகாரம் என்று கூறப்படுகின்ற தங்கள் மனைகளில்
வாழ்ந்தார்கள்.
நீதி, நெறிமுறைகள், அறம், தர்மம், இவைகளை
தழுவி வாழ்பவர்கள் பிராமணாள்.
நெறிமுறைகள் ஆங்கிலத்தில் - social norms என்று கூறப்படும். ஒரு சமூகத்தில் மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்று அச்
சமுதாயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் முறைகள்/விதிகளே நெறிமுறைகளாகும். இந்நெறிமுறைகள் எழுதப்படாத
மக்கள் கடைபிடிக்கும் விதிகளேயாகும். வாழ்க்கையில் பல, பல நெறிமுறைகள்
கடைப்பிடிக்கப்படுகின்றன. அன்றைய காலகட்டத்தில், பிராமணாள் குல மக்கள்
இந்நெறிமுறைகளை அரசனுக்கு ஆலோசனை வைத்து அவை மக்களுக்கு அறிவுறுத்தப்படும். சில
சட்டமாக பிரகடனப்படுத்தப்படும்.
அறமாவது ஒழுக்கம், வழக்கு,
தண்டம் என மூவகைப்படும்.
அறம் என்றால் மனு போன்ற நூல்களில் ,சொன்னவற்றை செய்வது, அது செய்யக் கூடாது என்று சொன்னவற்றை செய்யாமல் இருப்பது. கெட்டவர்கள் அற வழியில் செல்லாமல், அறம் அற்ற வழியில் செல்பவர்கள். இவர்கள் ஒழுக்க முறைகளை கடைப்பிடிக்காதவர்கள்.
அப்படி ஒழுக்கம் அற்றவர்களை எப்படி திருத்துவது என்றும் பரிமேலழகர் கூறுகிறார்.
ஒழுக்கம் தவறியவர்களுக்கு அவர்களை மீண்டும் அற வழியில் செலுத்த இரண்டு விதிகள் இருக்கிறது. ஒன்று வழக்கு. இன்னொன்று தண்டம்
.
சேலம் பத்மசாலியர் சமூகத்தின் கருத்து.
“வருணாச்சிரம தர்மத்தின் ஒரு விரும்பத் தகாத
வெளிப்பாடு இது எனக் கருதுகின்றேன்! சமுதாய அமைப்பில், ஆரம்ப காலத்தில் தொழில்
ரீதியாக இது ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம். இதன் பின், பிராமணர்கள்,இதை வேதங்களுடன்
தொடர்பு படுத்தி, பிரமாவின் சிரசிலிருந்து 'பிராமணர்கள்' தோன்றியதாகவும், புயங்களில் இருந்து 'சத்திரியர்கள்' தோன்றியதாகவும், இடுப்புப்
பாகத்திலிருந்து வேளாளர்கள் தோன்றியதாகவும், பாதத்தில் இருந்து, 'சூத்திரர்கள்' தோன்றியதாகவும் கூறினார்கள்!
சூத்திரர்கள், அறிவு சம்பந்தம்மான எதற்கும் அருகதையில்லாதவர்கள் எனவும்
கருதினார்கள்! பொதுவாக, இவர்கள்
தீண்டத்தகாதவர்கள் என வகைப் படுத்தப் பட்டார்கள்! இவர்கள் வேதம் படிக்க முனைந்தால்
இவர்களின், காதுகளில்
காச்சிய 'ஈயம்' ஊற்றப் பட்ட
சம்பவங்களும் நடந்திருக்கின்றன! இவர்கள் மேலே வரக்கூடாது, என்பதற்காக, இவர்களுக்கு 'அறிவு' சம்பந்தமான எல்லாமே
மறுக்கப் பட்டது!”
இவைகள் அன்றைய கருத்துக்கள்.
ஆனால் இன்றைய பிராமணாள்களை பார்ப்போமா?
இன்று தமிழகத்தில் நடக்கும் கொலைகளும்
கொலைகளும், கற்பளிப்புக்களுக்கும் பிராமணாள்கள் காரணமானவர்கள் இல்லை.
இவர்கள் ஆலய வழிபாட்டில் தங்கள் முழு நேரத்தையும் செலவிடுகின்றார்கள். பிராமணாள்
குலத்தில் அதிக விழுக்காடு படித்தவர்கள், அறிவாளிகள். சட்டத்தரணிகள்.
இன்றைய தமிழகத்தில் அப்படி என்றால் யார்
சாதி, குலம், தலித் கொலை, தலித் கற்பழிப்பு, கலப்புத் திருமண கொலை இவைகளுக்கு
காரணம். காரணம், பிராமணர்கள் அல்லாதார்தான் இந்த அட்டூளியங்களை கையில் எடுக்கின்றார்கள்.
காரணம்: வன்னியர், தேவர், கள்ளர், மறவர், அகமுடையார் இப்படிப்பட்டோர் தலித் மக்களையும், தாழ்ண்ட குலத்தோரையும்
வதைக்கின்றார்கள்.
இலங்கை வாழ்
பிராமணர்கள்தான் உலகத்திலேயே சிறந்த முதல் குலத்தவர். இவர்கள், படித்தவர்கள்,
இல்லையேல், ஆலய வழிபாட்டில் தங்களை ஈடுபடுத்துபவர்கள். சமஸ்கிருதம் உலகில் மிகவும்
இனிமையான மொழி. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி. இன்றும் நாம் பேசும்
தமிழில் சுமார் எண்பது விழுக்காடில் சம்ஸ்கிருத சொற்கள் இருக்கின்றன. இதை நாம்
புரிவதில்லை. தமிழேன்கின்றோம். ஆனால் இவை சம்ஸ்கிருத சொற்கள்.
மற்றைய மத குருக்கள், உதாரணம்: கிருஸ்தவ மத
குருக்கள், பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்திருந்தார்கள். பாலியல் குற்றம் என்று பல.
ஆனால் இலங்கை வாழ் சைவ மத குருக்களோ, பிராமணரோ சுத்தமானவர்கள்.
மற்றையோர் இலங்கை வாழ் சைவ, பிராமண
குலத்தினரை பார்த்து வாழவேண்டும்.
வாழ்க பிராமண குலம்.